தூத்துக்குடி: மாவட்ட நிர்வாகத் தின் முடிவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படவில்லை என்றும் தமிழக அரசு அரசாணை வெளி யிட்டு, அதன்படி ஆலை மூடப்பட்டு உள்ளது என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். ஆலை தரப்பினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல் படுவதாக கூறுவது தவறான தக வல் என்றும் ஆலை விவகாரத்தில் அரசின் முடிவு தெளிவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். "ஆலையில் உள்ள எந்தவித மான இயந்திரமும் இயக்கப்பட வில்லை. ஆலையைத் திறக்க நட வடிக்கை எடுக்கப்படுகிறது என் பது பொய்யான தகவல். ஆலை யைத் திறக்க வாய்ப்பே இல்லை," என்றார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி. இதற்கிடையே தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த எழுத்து பூர்வமான உத்தரவு பெறப்பட்டதா என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான ஒரு வழக் கின் விசாரணை நடைபெற்றபோது, 144 தடை உத்தரவை பொதுமக் கள் அறியும் வகையில் முன்கூட் டியே ஏன் பிறப்பிக்கவில்லை?" எனவும் அரசுத்தரப்பிடம் நீதிபதி கள் கேள்வி எழுப்பினார்.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை: ஆட்சியர் திட்டவட்டம்
1 mins read

