ஆகஸ்ட் 6க்குள்உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையைத் தாக்கல் செய்ய உத்தரவு

ஆகஸ்ட் 6க்குள்உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையைத் தாக்கல் செய்ய உத்தரவு

2 mins read

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என இருமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் அது ஏன் மதிக்கப்படவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான அட்டவணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறு தாக்கல் செய்யாவிட் டால் நீதிமன்ற அவமதிப்பு நடவ டிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தமிழக அரசுக்கு நீதி பதிகள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கடந்தாண்டு உயர் நீதிமன்றம் இருமுறை உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை மாநில அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் செயல்படுத்தவில்லை. இதையடுத்து மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவ மதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தி யது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங் கிய அமர்வின் முன் விசார ணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாததால் மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்க வேண்டிய 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி முடக்கப்பட் டுள்ளதாகச் சுட்டிக் காட்டினார். இதையடுத்து வாதிட்ட மாநிலத் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், தொகுதி சீரமைப்பு, தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தகுந்த வகையில் திட்டமிட்டு வருவதாக விளக்கமளித்தார்.

ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். எத்தனை ஆண்டுகள்தான் தேர் தலை நடத்துவது குறித்துத் தேர் தல் ஆணையம் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் என அவர்கள் கேள்வியும் எழுப்பினர். "கடந்தாண்டே இருமுறை தேர்தலை நடத்த உத்தரவிடப் பட்டது. அந்த உத்தரவு ஏன் மதிக்கப்படவில்லை?" என்று மேலும் கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள், 10 நிமிடங்களுக்குள் இவற்றுக்குரிய பதிலை அளிக்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட னர். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி தாங்கள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.