பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமனம்

பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமனம்

1 mins read

சென்னை: பிராமணர் அல்லாத ஒருவரை கோயில் அர்ச்சகராக தமிழக அறநிலையத்துறை நியமித்துள்ளது. பிராமணர் அல்லாதவர் அர்ச் சகராகலாம் என்ற உத்தரவை தமிழக அரசு ஏற்கெனவே பிறப் பித்திருந்தது. இதையடுத்து 206 பேருக்கு அர்ச்சகராவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான நீண்ட விசா ரணைக்குப் பிறகு அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பிராமணர் அல் லாத ஒருவர் அறநிலையத்துறை யால் அர்ச்சகராக நியமிக்கப் பட்டுள்ளார். இவர், 10 ஆண்டு களுக்கு முன்பு பயிற்சி பெற்ற 206 பேரில் ஒருவர் ஆவார். இவர், 5 மாதங்களுக்கு முன்பே மதுரையில் உள்ள கோயி லில் அர்ச்சகராக நியமிக்கப்பட் டுள்ளார்.

206 பேரில் இவர் ஒருவர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்பட் டதால் செய்திகள் உடனுக்குடன் வெளியாகவில்லை. இதற்கிடையே, கேரள மாநிலம் பிராமணர் அல் லாத 36 பேரை அர்ச்சகராக நிய மித்து கவனம் ஈர்த்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரது பாராட்டும் கிடைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.