கருணாநிதி மிக விரைவில் குணமடைவார்: ராகுல் காந்தி நம்பிக்கை

கருணாநிதி மிக விரைவில் குணமடைவார்: ராகுல் காந்தி நம்பிக்கை

1 mins read
6b31398e-3401-4870-a1c5-8faaecc2d43e
-

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் சீராக இருக்கிறது என்று காங்கி ரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் போலவே கரு ணாநிதியும் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வருகை தந்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். "திமுக தலைவரை நேரில் சந் தித்தேன். அவர் நல்ல உடல்நிலை யில் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைவார்.

"காங்கிரஸ் கட்சிக்கும் கரு ணாநிதிக்கும் நடுவே நீண்ட கால உறவு உள்ளது. அவர் எங்கள் கட்சியின் நீண்ட கால நண்பர்," என்றார் ராகுல் காந்தி. கருணாநிதி மிகவும் உறுதியா னவர் என்று குறிப்பிட்ட அவர், தமிழர்களுக்கே உரித்தான திடம் கருணாநிதியிடமும் உள்ளது என்றார். தமிழக மக்கள் எப்படி வலிமையானவர்களோ அப்படி கருணாநிதியும் வலிமையானவர் என்றும் அவர் விரைவில் மீண்டு வருவார் என்றும் ராகுல் தெரிவித்தார்.

இதற்கிடையே நேற்று கொட்டும் மழையிலும் கருணாநிதி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு வெளியே திமுக தொண்டர்கள் குவிந்தனர். கருணாநிதி உடல் நிலை சீராக இருப்பதாக வெளியா கும் தகவல்களால் அவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கிடையே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை எச்சரித்துள் ளது. இவ்வாறு அவதூறு பரப்பிய ஒருவரைப் போலிசார் கைது செய்துள்ளனர்.