சென்னை: அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரனுக்குப் போலிஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலரிடம் மனுவும் அளித்துள்ள னர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரனின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், தினகரனின் அரசியல் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில சுயநலவாதிகள் அவருடைய வீட்டின் மீது வெடிகுண்டு வீசி உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டார். தினகரனின் வீடு, கட்சி அலுவல கத்துக்கு உரிய போலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

