நில அபகரிப்பு புகார்: சார்பதிவாளர் உட்பட நால்வர் மீது வழக்கு

நில அபகரிப்பு புகார்: சார்பதிவாளர் உட்பட நால்வர் மீது வழக்கு

1 mins read
Google News Preferred Icon

தேனி: போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டின் பேரில் சார்பதிவாளர் உள்ளிட்ட நால்வர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவாகியுள்ளது. உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அக்கம்மாள். இவரது கணவர் மணி காலமாகிவிட்டார். இதையடுத்து கணவர் மணி பெயரில் இருந்த பூர்வீகச் சொத் தான ஒரு ஏக்கர் 86 சென்ட் நிலத்தைத் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டார் அக்கம்மாள்.

இந்த நிலம் மணியின் தந்தை ராமசாமிக்குச் சொந்தமானது. கடந்த 1943ஆம் ஆண்டு ராமசாமி இந்நிலத்தை வாங்கியதற்கான பத்திரங்கள் அக்கம்மாளிடம் உள் ளன. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் அக் கம்மாளுக்குச் சொந்தமான நிலத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார். இவரது தந்தை பெயரும் ராமசாமிதான். இந்தப் பெயர் ஒற்றுமையை வைத்து அவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு அக்குறிப்பிட்ட நிலத்தை ஹரிஹரன் என்பவருக்குத் தான மாக விற்றுவிட்டார் கண்ணம்மாள். இந்த நிலப்பரிமாற்றம் சின்னமனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் முருகேசன் என்பவரால் பதிவு செய்யப்பட்டது.