இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மரத்தா சமூகத்தினர் போராட்டம்

1 mins read

மும்பை: அரசு வேலை வாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நேற்று சிறை நிரப்பும் போராட்டத்தை மரத்தா சமூகத் தினர் நடத்தினர். மராட்டிய மாநிலத்தில் 30% மக்கள் தொகை கொண்ட மராத்தா சமூகத்தினர், அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் 16% இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு பிரம்மாண்ட அமைதிப் பேரணிகளை நடத்தி நாட்டின் கவனத்தை ஈர்த்தனர். இதில் பலன் கிடைக்காததால் அவர்களது போராட்டம் வன்முறை களமாக மாறியுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தங்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி நேற்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மராத்தா சமூகத்தினர் அறிவித்தனர். இந்நிலையில் போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் இருவர் நேற்றுமுன்தினம் உயிரை மாய்த்துக்கொண்டனர்.