சென்னை: சிலைக் கடத்தல் வழக்கு களை சிபிஐ வசம் மாற்றினால் அடுத்த சில மாதங்களில் அந்த வழக்குகள் முடங்கிவிடும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வழக்குகள் முடங்கி னால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பிவிட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பாக காவல்துறைத் தலைவர் பொன். மாணிக்கவேல் குழு நடத்திவரும் விசாரணை திருப்தி அளிக்க வில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. எனவே இந்த வழக்குகளை சிபிஐ வசம் ஒப்ப டைப்பது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அன்புமணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். எந்த ஓர் அரசும் அதன் மூத்த காவல்துறை அதிகாரி மீது நம்பிக்கை இல்லை என்று கூறாது என அவர் தெரிவித்துள்ளார்.
"பொன். மாணிக்கவேல் அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட அதிகாரி. உயர் நீதிமன்றம் தான் சிலை கடத்தல் வழக்குகளின் விசாரணை அதிகாரியாக அவரை நியமித்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு வரின் நேர்மையைச் சந்தேகிப்பது உயர் நீதிமன்றத்தையே அவமதிப்ப தற்கு சமமானது," என்று அன்பு மணி கூறியுள்ளார்.
சிலை கடத்தல் வழக்குகளின் விசாரணையை பொன். மாணிக்க வேல் குழு ஏற்ற பிறகுதான் பல வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதே கட்சியின் கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசனும் வெளிப்படுத்தி உள்ளார்.

