பிரியாணி கடை ஊழியர்களை நேரில் சந்தித்த ஸ்டாலின்

2 mins read
a4a19695-fc01-49c3-9e60-86a40e7160c1
-

சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பிரியாணி கொடுக்காததால் திமுக தொண்டர்கள் தாக்கிய கடை ஊழியர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆற்காடு சாலையில் தமிழ் செல்வன், 50, என்பவர் சொந்தமாக பிரியாணி கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 29ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு திமுகவைச் சேர்ந்த 11 பேர் 'ஓசி' பிரியாணி கேட்டனர். அதற்கு கடை ஊழியர்கள், வியாபாரம் முடிந்து கடையை மூடி விட்டதாகக் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் கடை ஊழியர்களை குத்துச் சண்டை பாணியில் குத்தினர். இதில் கடை உரிமையாளரின் தம்பியும் இரு ஊழியர்களும் படு காயமடைந்தனர்.

இதற்கிடையே கடையில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் ஓட்டல் உரிமையாள ரையும் ஊழியர்களையும் தாக்கிய காட்சி பதிவானது. இது, சமூக ஊடகங்களில் பரவியதால் திமுகவினர் உட்பட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த னர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை திமுக மேலிடம் 'இடைநீக்கம்' செய்தது. இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட யுவராஜ் உட்பட 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தச் சூழ்நிலையில் தாக்கு தலில் பாதிக்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர் தமிழ்ச்செல்வன், ஊழியர்களை சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலக மான அறிவாலயத்திற்கு வர வழைத்து ஸ்டாலின் விசாரித்தார். பின்னர் அவர்களுடன் உண வகத்துக்குச் சென்று ஊழியர்கள் தாக்கப்பட்ட இடங்களை ஸ்டாலின் பார்வையிட்டார்.

பிரியாணி கடை உரிமையாளரையும் ஊழியர்களையும் சந்தித்த ஸ்டாலின். படம்: தமிழக ஊடகம்