சென்னை: சிலை கடத்தல் வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது திருடர்களைக் காப் பாற்ற முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜய காந்த் தெரிவித்துள்ளார். இதன் தொடர்பில் நேற்று அறிக்கை ஒன்றை விஜயகாந்த் வெளியிட்டார். அதில் "தமிழகத்தில் பல ஆண்டுகளாக கோயில் சிலை களும் விலை உயர்ந்த பொருட் களும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை விசாரிப்பதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமை யிலான அதிகாரிகள் சாமி சிலை களையும் பொருட்களையும் மீட் டுள்ளனர். உதாரணமாக வெளி நாடுகளில் இருந்தும் குஜராத்தி லிருந்தும் ராஜராஜசோழன் சிலை யை மீட்டுக் கொண்டு வந்துள் ளனர். இதைப் பாராட்டி தமிழக அமைச்சரே நேரடியாக சென்று வரவேற்றார்.
பல சாமி சிலைகள் திருட்டுப் போயிருப்பதை வெளிச்சத்திற்கு அவர் கொண்டு வந்துள்ளார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை செய்வதற்காக பக்தர்களிடம் இருந்து 100 கிலோ தங்கத்திற்கு மேலாக காணிக்கையாக பெறப் பட்டு முழுமையாக திருடப் பட்டிருப்பதை பொன் மாணிக்க வேல் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அற நிலையத் துறை உதவி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருப் பதாகத் தெரிகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நேர் மையான அதிகாரிகளிடம் இருந்து சிபிஐயிடம் ஒப்படைத்திருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. திருடர்களைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறதோ என்ற சந் தேகத்தை எழுப்பியுள்ளது.
பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் குஜராத்திலிருந்து சிலைகளை மீட்டு வந்து கோயிலில் காட்சிக்கு வைத்தபோது பொதுமக்கள் உட்பட பலரும் பாராட்டினர். கோப்பு படம்: ஊடகம்