மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடனில் தத்தளிப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த இரு மாதங் களில் அதன் விமானிகளுக் கும் ஊழியர்களுக்கும் சம்ப ளத்தைக் குறைப்பது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பறப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக மும்பை யிலும் டெல்லியிலும் தனது ஊழிர்களைச் சந்தித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் நிதி நிலைமை மோசமாக இருப்பதை விளக்கி யதாக அந்நிறுவனத்தின் இரு நிர்வாகிகளை மேற்கோள் காட்டி 'இக்கனாமிக் டைம்ஸ்' செய்தி வெளியிட்டு உள்ளது.
நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ்
1 mins read

