கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு: புதுவையில் பதற்றம்

கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு: புதுவையில் பதற்றம்

2 mins read

புதுவை: தலித் மக்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த காரணத்தால் புதுவையில் உள்ள கூனிச்சம்பட்டு கிராமத் தில் பரபரப்பும் பதற்றமும் நிலவி யது. இதையடுத்து போலிசார் குவிக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இக்கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் பெண் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அச்சமயம் உள்ளூர் மக்களும் கோவில் நிர்வாகிகளும் சேர்ந்து கொண்டு அப்பெண்ணை அனும திக்க மறுத்தனர்.

இதையடுத்து தலித் மக்களுக் கும், பிற வகுப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அச்சமயம் போலிசார் தலையிட்டு இருதரப்பையும் சமாதானப்படுத்தி யதுடன், தற்காலிகமாக தீர்வும் கண்டனர். இந்நிலையில் நேற்று தீண் டாமை எதிர்ப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள் சார்பில் ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் குறித்து முன்கூட் டியே அறிவிக்கப்பட்டிருந்ததால் திரௌபதி அம்மன் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே இந்தப் போராட் டத்தைக் கண்டித்துக் கூனிச்சம் பட்டு கிராமத்தில் உள்ள இதர வகுப்பினர் நூற்றுக் கணக்கில் ஒன்று திரண்டு ஆலயத்தின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் போலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலி சார் தடியடி நடத்தினர். இத்தகைய பதற்றமான சூழ் நிலையில் மாவட்ட ஆட்சியரும் முதுநிலை காவல் கண்காணிப்பா ளரும் விரைந்து வந்து நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இரு தரப்பினரும் கோவிலுக்குள் அனு மதிக்கப்பட்டனர்.