சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிகரெட் துண்டுகள் சேகரிக்கும் 'குப்பைக்காரன்'

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிகரெட் துண்டுகள் சேகரிக்கும் 'குப்பைக்காரன்'

2 mins read
b77e2546-6f6e-4908-8b11-fb94b89d9f37
-

சேலம்: குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளைச் சேகரித்து, அதை மறு சுழற்சி செய்து, மீண் டும் பயன்படுத்தும் பொருளாக மாற்றி விற்பனை செய்கிறது 'குப்பைக்காரன்' என்ற அமைப்பு. சேலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கி உள்ளனர். மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக் கும் வகையில் 'சிகரெட் உண்டி யல்' என்ற புதிய முயற்சியிலும் இந்த இளையர்கள் ஈடுபட்டுள் ளனர். சேலம் மாநகராட்சியுடன் இதற் காக ஒப்பந்தம் செய்துகொண் டுள்ள இந்த அமைப்பு, மாநகராட்சி சேகரிக்கும் குப்பைகளையும் விலை கொடுத்து வாங்குகிறது. "பொதுவாக எல்லாக் குப்பைக ளுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை அறிந்து குப்பை களை வாங்கி, மறுசுழற்சி செய்து விற்று வருகிறோம்.

"புகைபிடிப்பது உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். புகைத்துவிட்டு கீழே போடப்படும் சிகரெட் துண்டுகளா லும் பாதிப்பு உண்டாகும். ஒரு சிகரெட் துண்டு முழுமையாக மக்குவதற்கு 10 மாதங்கள் வரை ஆகும்," என்கிறார்கள் குப்பைக்கா ரன் அமைப்பின் உறுப்பினர்கள். சிகரெட் துண்டுகளில் உள்ள பஞ்சு 10 மில்லிமீட்டர் அளவுள்ள தண்ணீரை உறிஞ்சுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் குறையும் என்றும் குறிப்பிடும் இவர்கள், சிக ரெட் துண்டுகளையும் மறுசுழற்சி செய்கிறார்கள். இதற்காக சேலத்தில் ஐம்பது தேநீர்க் கடைகளில் 'சிகரெட் உண்டியல்' வைத்து அதன் மூலம் சேகரிக்கப்படும் சிகரெட் துண்டு களை கிலோவுக்கு 100 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். இந்த சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்து பயிர்களுக்கு உரமாக பயன்படுத்துவதாகத் தெரிவிக்கின்றனர்.