இந்தியாவில் 2.4 மி. அரசு வேலைகள் காலி

இந்தியாவில் 2.4 மி. அரசு வேலைகள் காலி

1 mins read

இந்திய இளையர்களிடையே வேலையின்மை அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் வேளையில், நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் சுமார் 2.4 மில்லியன் பணியிடங்கள் காலி யாக இருப்பதாகத் தெரியவந்து உள்ளது. நாடாளுமன்றத்தில் கேட்கப் பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களிலிருந்து இந்தத் தரவு தொகுக்கப்பட்டு உள்ளது. தொடக்கப்பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள் போன்றவற்றில் மட்டும் முறையே சுமார் 9 லட்சம், 1.1 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப் பட்டது. சர்வ ‌ஷி அபியான் திட்டம் தவிர மாநிலம், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்தின்கீழ் வரும் பள்ளிகளிலும் அதிக காலியிடங்கள் உள்ளன. மாநிலங்கள், யூனியன் பிர தேசங்கள் ஆகியவற்றில் உள்ள பள்ளிகளுக்கு உதவிகள் வழங்கும் மத்திய அரசின் திட்டமே சர்வ ‌ஷிக்‌‌‌ஷா அபியான். சிறந்த பொருளியல் நாடுகளில் இந்தியாவில்தான் காவலர், பொதுமக்களுக்கு இடையேயான விகிதம் ஆகக் குறைவாக இருக்கிறது.