கணவன்மார்களை காப்பாற்ற அமைப்பு

கணவன்மார்களை காப்பாற்ற அமைப்பு

1 mins read

புதுடெல்லி: மனைவியால் பாதிக் கப்படுவோரின் பிரச்னை களுக்குத் தீர்வுகாண அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி ஹரிநாராயண் ராஜ்பர் கேரிக்கை விடுத்துள்ளார். பெண்களின் பிரச்னை களுக்கு தீர்வு காண பல்வேறு அமைப்புகளை அரசு ஏற்படுத் தியுள்ளதாகவும் ஆனால் ஆண்களின் நலனுக்காக எந்த அமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அவர் பேசினார். மனைவிகளால் கணவர்கள் கெடுமைப்படுத்தப்படுவது அதி கரித்து வருவதாகவும் பெய்ப் புகார்கள் காரணமாக ஏராளமான கணவர்கள் சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளதாகவும் பாஜக எம்பி தெரிவித்தார். எனவே திரு மண மான ஆண்கள் நலனுக்கென 'புருஷ் ஆயேக்' என்ற பெயரில் ஓர் அமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரி வித்தார். இக்கேரிக்கையை அவர் முன்வைத்தபேது அவை யில் சிரிப்பலை எழுந்தது. அங் கிருந்த ஐந்து பெண் எம்பிக் களும் புன்னகைத்தனர்.