குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாதோரிடம் வங்கிகள் ரூ.5,000 கோடி வசூல்

1 mins read

மும்பை: கடந்த 2017-18ஆம் நிதி யாண்டில் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாததால் வாடிக்கையாளர்க ளிடம் இருந்து ரூ.5,000 கோடி வரை வங்கிகள் அபராதமாக வசூ லித்துள்ளன. பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் ஏழை எளிய மக் களுக்கு 30.8 கோடி அடிப்படை வங்கிக் கணக்குகள் திறக்கப்பட் டதைத் தொடர்ந்து அபராதம் மூல மான வங்கிகளின் வருமானம் அதிகரித்துவிட்டது. காரணம் இந்தக் கணக்குகளின் வாடிக்கை யாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கும் அளவுக்கு வசதியற்றவர்கள். இருந்தபோதி லும் அவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராதம் அதிக வசூலித்த வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) உள்ளது.