மன்னார்குடி: தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சி மத்திய அரசுக்கு சலாம் போடும் அடிமை அதிமுக ஆட்சியாக உள்ளது என அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா இந்தியாவி லேயே முன்மாதிரி மாநில மாகத் தமிழகத்தை உரு வாக்கி வைத்திருந்தார் என மன்னார்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்வில் பேசியபோது அவர் குறிப்பிட்டார். "18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியா கும். அதன் பிறகு அவர் கள் மீண்டும் சட்டப்பேர வைக்குச் செல்வார்கள். "அதன் பிறகு நடப்பு ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்படும். அப் போது அமைச்சர்கள் கைதாகி சிறையில் அடைக் கப்படுவார்கள் என்பது உறுதி," என்றார் தினகரன்.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று குறிப்பிட்ட அவர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஆளுங் கட்சியினர் ஒவ்வொரு வாக்குக்கும் 10,000 ரூபாய் வழங்கினாலும் அமமுக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார். இந்த இடைத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்றும் அவர் கூறினார்.

