சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்தியதாக சந்தேகம்: 19 பேர் கைது

சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்தியதாக சந்தேகம்: 19 பேர் கைது

1 mins read
Google News Preferred Icon

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகத் தின் பேரில் திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கை காரணமாகப் பெரும் பரபரப்பு நிலவியது. பல மணி நேரம் நீடித்த சோதனை, விசாரணையின் முடி வில் சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர் உட்பட 19 பேர் கைதாகினர். ஞாயிற்றுக் கிழமையன்று சிங்கப் பூரில் இருந்து திருச்சி வந்தடைந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி கள் பலர் தங்கம் கடத்தி வருவ தாக சிபிஐக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்துக்கு விரைந்த சிபிஐ குழு ஒன்று பயணிகளிடம் உடன டியாக விசாரணை மேற்கொண்டது.

துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள அதிகாரி தலை மையில் மூன்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு வினர் சந்தேகத்துக்கு இடமான பயணிகளை மட்டும் தடுத்து வைத்து விசாரணை மேற் கொண்டனர். சுமார் 50 பேரின் உடைமை களைச் சோதித்த சிபிஐ அதிகாரி கள், அவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி பதில் களைப் பெற்றனர். மொத்தம் 23 மணி நேரம் இந்தச் சோதனையும் விசாரணையும் நீடித்தது. இதையடுத்து சுங்கத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 6 அதிகாரிகள் உட்பட 19 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த னர். மூன்று அதிகாரிகள் வசிக்கும் வீடுகளிலும் அவர்களது அலுவலக அறைகளிலும் உடனுக் குடன் சோதனை நடத்தப்பட்டது.