படங்களை வெளியிட்ட விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் நிம்மதி

படங்களை வெளியிட்ட விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் நிம்மதி

1 mins read
dfca2cd3-d2c4-466e-8951-1bcd9cdb3c3c
-

சென்னை: அமெரிக்காவில் தமது குடும்பத்தாருடன் உற்சாகமாகப் பொழுதைக் கழிக்கும் காட்சிகளு டன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவர் நலமாக இருப்பதை உறுதி செய்யும் இந்தப் புகைப்படங் களால் தேமுதிகவினர் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தைராய்டு பிரச்சினையால் பாதிக் கப்பட்டுள்ளார் விஜயகாந்த். இத னால் அவரது குரல் வளம் பாதிக் கப்பட்டது. வழக்கமாக பொதுக் கூட்டங்களில் ஆவேசமாகப் பேசு பவர் அண்மைக் காலமாக கூட்டங் களில் அதிகம் பேசுவதில்லை.

செய்தியாளர்களின் சந்திப்புக ளிலும் கூட கேள்விகளுக்குச் சில வார்த்தைகளில் மட்டுமே பதில் அளித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு அமெ ரிக்காவில் சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதைய டுத்து கடந்த மாதம் அமெரிக்கா சென்றார் விஜயகாந்த். அங்கு அவருக்கு ஒன்றரை மாதம் சிகிச்சை அளிக்கப்படும் எனத் தகவல் வெளியானது. இந் நிலையில் அமெரிக்கா சென்ற பிறகு அவரது புகைப்படம் எதுவும் வெளியாகாததால் தேமுதிக நிர்வா கிகளும் தொண்டர்களும் கவலை அடைந்தனர். இதை அறிந்த விஜயகாந்த், தனது மனைவி, மகன் சண்முகபாண்டியனுடன் அமெரிக்காவில் இருக்கும் புகைப் படங்களை தமது சமூக வலைத் தளப்பக்கத்தில் வெளியிட்டுள் ளார். குடும்பத்தாருடன் சிரித்தபடி அவர் பேசிக் கொண்டிருக்கும் அந்தப் புகைப்படங்களைக் கண்டு தேமுதிகவினர் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

மனைவி, மகனுடன் விஜயகாந்த். படம்: தகவல் ஊடகம்