சென்னை: சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழக அரசுக்கு ஏற்பட் டுள்ள பின்னடைவாகக் கருதப் படுகிறது. இது தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணை ஒருநிமிடம் கூட அமலில் இருப்பதற்கு தகுதி யற்றது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழகக் கோவில்களில் இருந்து ஏராளமான சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. இது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவர் ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான போலிஸ் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இக்குழுவினர் ஏராளமான சிலைகளை மீட்டுள்ள நிலையில், சிலைகள் தொடர்பான வழக்கு களை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு திடீரென ஓர் அரசாணையைப் பிறப்பித்தது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
அவரது மனு மீதான விசா ரணை நேற்று நடைபெற்றபோது, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தகுதியற்ற இந்த அரசாணை அமலில் இருக்க அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர், அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் தலை யிட்டு, பணிக்கு இடையூறு செய் வதோடு அதிகாரிகளை மிரட்டி வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கங்களின் கூட்ட மைப்பினர் புகார் எழுப்பியுள்ளனர். பொன்.மாணிக்கவேல் உள் நோக்கத்துடன் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவின் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் அறநிலையத்துறை அதி காரிகள் சங்கங்களின் கூட்ட மைப்பு சாடியுள்ளது.

