காரைக்குடியில் கொதிகலன் வெடித்தது

காரைக்குடியில் கொதிகலன் வெடித்தது

1 mins read

காரைக்குடி: ரசாயன ஆலையில் கொதிகலன் திடீரென வெடித்த தால் காரைக்குடியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்த விபத்து காரணமாக ஆலையிலிருந்து நச்சுத்தன்மை கொண்ட வாயு பரவி வருகிறது. அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, கோவிலூர் அருகே இயங்கி வந்த அந்த ஆலையில் இருந்து வெளியேறிய ரசாயன வாயுவால் 5 பேருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவேச மடைந்த பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலிசார் பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர். இந்நிலையில் கொதிகலன் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், ரசாயன வாயு காற்றில் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.