திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நல்லுடல் அவர் விரும்பியபடியே மெரினா கடற் கரையில் அண்ணாதுரை சமாதி அருகே நேற்றிரவு பல்லாயிரக் கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த பல நாட்களாக உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த மு. கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். நேற்று அதிகாலை முதல் ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்த கலைஞரின் உடலுக்கு தேசிய கொடியை ராணுவ அதிகாரி கள் போர்த்தினர். பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் உட்பட பல தலைவர்கள், கட்சியினர், மக்களின் அஞ்சலிக்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாக னத்தில் கருணாநிதி உடல் ஏற்றப் பட்டு இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங் கியது.
வழிநெடுகிலும் தொண்டர் கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி னர். ஸ்டாலின் உள்ளிட்ட குடும் பத்தினர் நடந்தவாறே இறுதி ஊர் வலத்தில் சென்றனர். மெரினா வந்ததும் முப்படை வீரர்கள் கருணாநிதி உடலைச் சுமந்து வந்து இறுதி மரியாதை செய்தனர். தேசியக் கொடியை ஸ்டாலினிடம் வீரர்கள் கொடுத்தனர். பின் குடும் பத்தினர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். பிறகு சந்தனப் பேழையில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

