சென்னை: சென்னை கடற்கரையில் அண்ணா நினைவாலயம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கக் கோரிய வழக்கு விசாரணை முடிவடைந்து கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக் கம் செய்ய உயர் நீதிமன்றம் நேற்று உத்தர விட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடலை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தமிழக அரசு நிராகரித்தது. சென்னை காந்தி மண்டபம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயாராக இருப்பதாக வும் அரசு தெரிவித்தது. இதனையடுத்து இந்த விவகாரம் நீதிமன் றம் சென்றது. இந்த வழக்கு விசாரணை உடனடியாக செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்குத் தொடங்கியது. தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் இல்லத்தில் நடந்த விசாரணையின் முடிவில் நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர் பாக தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் பதில் மனுவைத் தாக்கல்செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனு, "கருணாநிதியின் உடலை காந்தி மண்டபத்தில் அடக்கம் செய்ய முடிவு எடுத் தது அரசின் கொள்கை முடிவாகும். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட்டு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது," என்று தெரி வித்தது. இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத் துக்கு எதிரான நிலுவையில் இருந்த வழக்கு கள் மீட்டுக்கொள்ளப்பட்டதை அடுத்து அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. மெரினாவில் நினைவிடம் தொடர்பான ஐந்து வழக்குகளும் தள்ளுபடியானதால் திமுக தரப்பில் தாக்கல் செய்த மனுவையும் வாதங்களையும் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவையும் பதிவு செய்வதாக நீதி பதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த இரண்டு மனுக்களை யும் நீதிபதிகள் ஒப்பிட்டுப் பார்த்தனர். தொடர்ந்து, நீண்ட நேரத்துக்குப் பிறகு இருதரப்பு வாதம் நிறைவடைந்தது. பிறகு, நீதிபதிகள் தீர்ப்புகளை வாசித்தனர். அதில், கருணாநிதியின் உடலை கடற்கரையில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். உத்தரவைத் தொடர்ந்து நேற்று பரபரப்பாக பணிகள் தொடங்கின. இதனிடையே, இந்தத் தீர்ப்பு திமுகவினரி டையே கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தியதாக தெரியவந்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன், "இறந் தும் பேராடிய கருணாநிதி வாங்கித் தந்த இன்னெரு வெற்றி இது," என்றார். திமுக தலைவர் கருணாநிதி தான் மரணம் அடைந்ததும் கடற்கரையில் அண்ணாதுரை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே தன்னையும் அடக்கம் செய்துவிடும்படி தனது விருப்பத்தை ஏற்கெனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

