பிரதமர் மோடி அஞ்சலி

பிரதமர் மோடி அஞ்சலி

1 mins read

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத் தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற் றும் திமுக தொண்டர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி நேற்றுக் காலை 10.20 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடற்படைத் தளத்திற்குச் சென் றார். அங்கிருந்து கார் மூலம் ராஜாஜி அரங்கம் சென்ற அவர், கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது குடும் பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மு. க. அழகிரி வேறு இடத்தில் இருந்ததால் அவரைச் சந்திக்க முடியாமல், அழகிரி எங்கே என்று பிரதமர் மோடி ஸ்டாலினை கேட்டார்.