புதுச்சேரி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் காரைக்காலில் புதிய மேற்குப் புறவழிச் சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப்படும். புதுச்சேரியில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை வைக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி அறிவித்தார். திரு கருணாநிதியின் மறைவை யொட்டி புதுச்சேரியில் பொது விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக் கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதனிடையே, கருணாநிதி, 94, மறைவையொட்டி அவரது பெயர் உலக அளவில் டுவிட்டரில் முதல் இடத்தில் பரபரப்பாகியது. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப் பட்டார். தொடர்ந்து 11 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானதாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக டுவிட்டரில் அவரின் ஹேஷ்டேக்குகள் பெரும் பரபரப் பாக இருந்துவந்தன. கருணாநிதி மறைவையொட்டி அவரது பெயர் உலக அளவில் முதல் இடத்தில் பிரபலமாக இருந் தது. மேலும் கருணாநிதியின் இரங்கல் செய்தி 3வது இடத்தில் இருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

