அகில இந்திய தலைவர்கள் இறுதி அஞ்சலி

அகில இந்திய தலைவர்கள் இறுதி அஞ்சலி

2 mins read

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒரு வரான திமுக தலைவர் கருணா நிதியின், 94, மறைவுக்கு இந்தியத் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், சமூக, சமய, திரைப் பட பிரமுகர்கள் என எல்லா தரப் பினரும் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். காவேரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணிக்கு காலமான கருணாநிதி யின் நல்லுடல், கோபாலபுரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு இரவு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினரும் கட் சித் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு நல்லுடல் சிஐடி காலனியில் இருக்கும் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங் கிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

கருணாநிதியின் நல்லுட லுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட் டது. தமிழக ஆளுநர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள் ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் திரை யுலகத்தினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் திரு கருணாநிதி உடலுக்கு அஞ் சலி செலுத்தினர். கேரள முதல்வர் பினராய் விஜயன், ஆளுநர் சதாசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரும் கருணா நிதிக்கு அஞ்சலி செலுத்த நேரடி யாக வந்திருந்தனர்.