பெங்களூரு: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கின் கீழ் இந்நட வடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பு தெரிவிக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உரை நிகழ்த்திவிட்டு நேற்று அதி காலை பெங்களூரு வந்தடைந்தார் திருமுருகன் காந்தி. இந்நிலையில் விமான நிலையத்தில் வைத்து அவரைப் போலிசார் கைது செய்தனர். "எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் எங்கள் இயக்கத் தின் சார்பில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கவே திருமுருகன் காந்தி பெங்களூரு வந்தடைந்தார்.
"அதிகாலையில் போலிசார் கைது செய்துள்ளனர். பாஜ அரசு மற்றும் பழனிசாமி அரசின் இந்த அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்," என மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

