நீலகிரி கூடலூரில் வெள்ளம் பெருக்கெடுப்பு

நீலகிரி கூடலூரில் வெள்ளம் பெருக்கெடுப்பு

1 mins read
Google News Preferred Icon

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளம் கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளநீரில் மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்துச் செல்லப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக உதகை மற்றும் கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக் கோடு செல்லும் சாலையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். உதகை, கூடலூரில் இருந்து நாடுகாணி வழியாக கேரளா கோழிக்கோடு, மஞ்சேரி, மலப்புரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் கனமழை காரணமாக மரங்கள் விழுந்தன.

மின் கம்பங்களும் சாய்ந்ததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. நிலம்பூர் பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் அவ்வழியாக தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் பகுதிகளுக்கு லாரிகளில் சரக்குகள் ஏற்றிவந்த ஓட்டுநர்களையும் லாரிகளில் வந்தவர்களையும் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்டு வருகிறார்கள்.