சென்னை: தேச விரோத செயலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது. ஜெனீவா நகரில் அண்மையில் நடந்த ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது, திருமுருகன் காந்தி அரசுக்கு எதிராக பேசியதாக உறுதிபட தெரியவந்தது. அதையடுத்து போலிஸ் வழக்குப் பதிந்தது. ஜெனீவாவில் இருந்து திருமுருகன் காந்தி இந்தியாவுக்கு திரும்பியபோது பெங்களூருவில் கைதாகி பிறகு சென்னை கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலையானார். வழக்கை விசாரித்த நீதிபதி, திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்றும் காவல்துறை விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
'திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது'
1 mins read

