கொச்சி: கேரளாவின் பெரும் பாலான பகுதிகளிலும் கடந்த ஒரு சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை, நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண் ணிக்கை 30ஆக அதிகரித்துள் ளது. சுமார் 54,000 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களில் 15,600 பேருக்கும் மேலானோர் பாதிக்கப்பட்ட பகுதி களில் இருந்து அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் மாநிலங்கள் எங்கும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 500 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெள்ளம் கடுமை யாகப் பாதித்துள்ள இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், வய நாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளை கேரள முதல் வர் பினராயி விஜயன் ஹெலி காப்டர் மூலம் பார்வையிட்டார்.
முதல்வருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, வருவாய்த்துறை அமைச்சர் இ. சந்திரசேகரன் ஆகியோரும் இணைந்து வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து கேரள மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் நிவாரணமும் வெள்ளத்தில் வீடு, விளைநிலங்களை இழந்தவர் களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த மாநிலத்தில் வெள்ளத் தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ராணுவப் படை, கடல் படை, விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட கேரளாவில் உள்ள 40 ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

