500 சொகுசு கார்களைத் திருடியவர் கைது

500 சொகுசு கார்களைத் திருடியவர் கைது

1 mins read
0205a3e3-bc4a-47b4-aac7-45460ac2e3a7
-
Google News Preferred Icon

புதுடெல்லி: டெல்லியில் ஆண்டிற்கு 100 சொகுசு வாகனங்களை திருடுவதே தனது இலக்கு என்றும் முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள் என்றும் முன்பு ஒருமுறை காவல்துறையினரிடம் தொலை பேசி மூலம் சவால் விட்டு பேசிய ஷஃப்ருதீன் இப்போது போலிஸ் வலையில் சிக்கியுள்ளான். டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக உயர்தர 500 சொகுசுக் கார்களைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஷஃப்ருதீனை, 29, போலிசார் கைது செய்தனர். "ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் மடிக்கணினி, காரின் பாதுகாப்பை உடைக்கும் உயர் தொழில்நுட்பக் கருவிகள், ஜிபிஎஸ் உள்ளிட்டவற்றுடன் டெல்லி வரும் ஷஃப்ருதீன், தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து கார் திருட்டு சம்பவத் தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலை யில் கடந்த 3ஆம் தேதி காருடன் மாட்டிக்கொண்ட ஷஃப்ருதீன் காவல்துறையின ரிடமிருந்து தப்ப காரை வேக மாகச் ஓட்டியுள்ளார். ஆனால் அவரை விடாது துரத்தி போலிசார் கைது செய்தனர்" என போலிஸ் துணை ஆணை யர் ராஜேஷ் டியோ கூறினார்.