இரும்புச் சத்து மாத்திரை சாப்பிட்டதால் சிறுமி மரணம்; 161 மாணவர்கள் பாதிப்பு

இரும்புச் சத்து மாத்திரை சாப்பிட்டதால் சிறுமி மரணம்; 161 மாணவர்கள் பாதிப்பு

1 mins read
75d98ccf-825b-4a11-864b-621ddd2736ac
-

மும்பை: மும்பை நகராட்சிப் பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரையைச் சாப்பிட்ட 12 வயது மாணவி சந்தானி முஹம்மது ரசா உயிரி ழந்தார். 161 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிறுமி சந்தானி உயிரிழந்த சம்பவம் மற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகள் இந்த மருந்தை சாப்பிட்ட மறுநாளான செவ்வாய் அன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட தாகவும் இதற்கு முன்னால் அவள் நல்ல உடல்நலத்துடன் இருந்ததாகவும் வியாழனன்று ரத்தமாக வாந்தி எடுத்த மகள் இறந்துவிட்டதாக வும் இறந்து போன மாணவியின் பெற்றோர் கூறியதாக போலிசார் கூறினர். மாணவி சந்தானி இறந்த தைத் தொடர்ந்து பதற்றமடைந்த பெற் றோர் இதர 161 குழந்தைகளை யும் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

மாணவர்களிடையே ரத்த சோகை நோயைத் தடுப்பதற்கான மத்திய அரசின் நலத்திட்டத்தின் கீழ் இரும்புச்சத்து, குடற்புழு நீக்க மாத்திரைகள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த திங்களன்று வழங்கப் பட்டது. மத்திய அரசின் இத் திட்டமானது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர். இதையடுத்து மற்ற 161 மாண வர்களையும் பரிசோதித்த குழந் தைகள் நல மருத்துவர், சில மாணவர்களுக்கு வாந்தி, மயக் கம் இருந்ததாகவும் மற்றபடி பயப்படும்படியான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் மாண வர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் எனவும் கூறினார். 2018-08-12 06:00:00 +0800