சோகத்தால் அசைவத்தை கைவிட்ட கருணாநிதி

சோகத்தால் அசைவத்தை கைவிட்ட கருணாநிதி

1 mins read
9c418c28-5a1e-4028-902c-3c7468516a85
-
Google News Preferred Icon

சென்னை: பாசமாக வளர்த்த செல்லப் பிராணி காலமானதை அடுத்து திமுக தலைவர் கருணா நிதி அசைவத்தில் இருந்து சைவ உணவுக்கு மாறிய தகவல் தெரிய வந்துள்ளது. தமது வீட்டில் சில நாய்களை வளர்த்து வந்துள்ளார் கருணாநிதி. அவற்றுள் கருப்பு நிறம் கொண்ட நாய் மீது அதிக பாசமும் வைத்திருந்தார்.

"எதையெல்லாம் அவர் சாப்பிடுகிறாரோ அவற்றை அந்த நாய்க்கும் கொடுப் பார். அந்தச் செல்லப் பிரா ணியும் அவர் மீது துள்ளிக் குதித்து மடியில் ஏறி விளையாடும்.

"அந்த நாய் திடீரென இறந்துவிட்டது. அதன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த கலைஞர் சோகமடைந்தார்," என்று கனிமொழி எம்பி., கூறியுள்ளார்.

அந்தக் கருப்பு நாயின் உடலை ஆலிவர் சாலையில் உள்ள வீட்டின் பின்புறம் புதைத்ததாகக் குறிப்பிட் டுள்ள அவர், அதன் நினைவாக மரக்கன்று ஒன்றை நட்டு வைத்த தாகவும் கூறியுள்ளார்.

"நாய் திடீரென இறந்தது கலைஞரை மனதளவில் மிகவும் பாதித்தது. அதனால் அவர் அசைவ உணவு சாப்பிடுவதை இரண்டு ஆண்டுகள் நிறுத்தி விட்டார். மருத்துவக் காரணங்களுக் காக அசைவ உணவு சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கினர்," என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.