மதிப்பெண் முறைகேடு: அண்ணா பல்கலையின் பதிவாளர் நீக்கம்

மதிப்பெண் முறைகேடு: அண்ணா பல்கலையின் பதிவாளர் நீக்கம்

1 mins read
bccd1fb7-4255-43d6-9a3b-500791e7ccbd
-

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளரைப் பதவி நீக்கம் செய்து துணைவேந்தர் நடவடிக்கை எடுத்துள்ளார். அண்மையில் இப்பல்கலைக்கழகத்தில் நடந்த சில முறைகேடுகள் அம்பலமாகின. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பதும் அதன்மூலம் பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் கைமாறியிருப்பதும் போலிசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அண்ணா பல்கலையின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்ளிட்ட 10 பேர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்விவகாரத்தில் பதிவாளர் கணேசனுக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் பதிவாளர் பதவியில் இருந்து அவரை நீக்கி உத்தரவிட்டுள்ளார் துணைவேந்தர் சூரப்பா.