ராமநாதபுரம்: நான்கு நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 27 மீன வர்களை இலங்கை கடற் படை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங் கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்டச் செயலர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார். மீனவர்களை உடனடி யாக விடுவிக்காவிட்டால், நாட்டுப்படகு மீனவர்கள் அனைவரும் கச்சத்தீவில் குடியேறும் போராட்டம் நடத் தப்படும் என்றார் அவர். ராமநாதபுரத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன் பாக மீனவர்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத் தவும் முடிவு செய்திருப்ப தாகத் தெரிவித்தார். "நாட்டுப்படகு மீனவர் களை இலங்கை கடற்படை கைது செய்வது மேலும் தொடராமல் தடுக்கப்பட வேண்டும் என்றார்," கருணாமூர்த்தி
கச்சத்தீவில் குடியேறுவோம்: மீனவர்கள் எச்சரிக்கை
1 mins read

