வத்திராயிருப்பு: சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியதை அடுத்து அங்குள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு தாணிப்பாறை கதவு மூடப்பட்டு, பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலுக்கு மேற்புறம் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிய மகாலிங்கம் கோவிலின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் திடீரென மூண்ட காட்டுத் தீ வேகமாகப் பரவியது. இதைக்கண்ட வனத்துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். எனினும் மறுநாள் காலை 5 மணிக்கு மீண்டும் அதே பகுதியில் காட்டுத் தீ சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் பரவியது. இதில், மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின. வனவிலங்குகள் தப்பியோடின.
சதுரகிரியில் காட்டுத் தீ பரவல்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
1 mins read

