ஜெயா நினைவிடத்தை அகற்றக் கோரும் மனு: மீண்டும் விசாரணை

ஜெயா நினைவிடத்தை அகற்றக் கோரும் மனு: மீண்டும் விசாரணை

1 mins read

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தை அகற்றக்கோரி தாம் தொடுத்த வழக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளுபடி செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். நினைவிடம் தொடர்பான வழக்கில் தனது அனுமதியில்லாமல் தனது வழக்கறிஞர் செயல்பட்டதாகவும், இதன் காரணமாகவே தமது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் நேற்று உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி நீதிபதிகளிடம் முறையிட்டார் ராமசாமி. இதையடுத்து அவரது மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.