சென்னை: தமிழகம் முழுவதும் 1 லட்சம் பனை விதைப் பந்துகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நீர் வளத்தை காக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். "தமிழகம் முழுவதும் பனை விதைப் பந்துகளை நடவேண்டும் என்பதே எனது இலக்கு. ஒரு காலத்தில் தமிழகத்தில் 30 கோடிக்கும் அதிகமாக இருந்த பனை மரங்களின் எண்ணிக்கை இப்போது 3 கோடியாகக் குறைந்துள்ளது. நிலத்தடி நீர் ஆவியாகாமல் தக்கவைத்து நீர்வளத்தைக் காப்பதில் பனை மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன," என்றார் திருமாவளவன். இன்று நிலத்தடி நீர்மட்டம் வற்றிப்போவதற்குப் பனை மரங்கள் இல்லாததே காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு லட்சம் பனைவிதைப் பந்துகள் நடுவதே இலக்கு: திருமா தகவல்
1 mins read

