சென்னை: தமிழகத்தில் உயர் கல்விக்கான சேர்க்கை விகிதம் 48 விழுக்காடு அளவுக்கு அதிக ரித்துள்ளதாக முதல்வர் பழனி சாமி தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை யொட்டி நேற்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் உரையாற்றிய அவர், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அதிக ளவு பங்களித்தது தமிழகம்தான் என்றார். தேசியக் கொடியை ஏற்றி வைத்ததைப் பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், சுதந்திரப் போராட்டத் தியாகிக ளுக்காக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார். "ஜெயலலிதா வழியில் செயல் படும் அதிமுக அரசு ஏழைகளுக் காகப் பாடுபட்டு வருகிறது. அனைவருக்கும் தரமான கல் வியை அளிக்க உறுதி பூண்டுள் ளோம். பள்ளிக் கல்வித் துறையில் அரசு சாதனை படைத்து வருகி றது," என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
வெள்ளையர்களுக்கு எதிராக வேலூரில் இருந்து புரட்சி தொடங் கியதை எண்ணிப் பெருமை கொள்ள வேண்டும் என்றும், நாட் டுக்காகப் போராடிய வரலாற்று நாயகர்களை அனைவரும் போற்றிப் புகழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமது உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். சுதந்திரப் போராட்டத் தியாகி களுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

