20 டிஎம்சி மழை நீர் வீணாகக் கடலில் கலந்தது

20 டிஎம்சி மழை நீர் வீணாகக் கடலில் கலந்தது

2 mins read
Google News Preferred Icon

சென்னை: நீர் மேலாண்மையில் தமிழக அரசு முழுமையாகத் தோல்வி அடைந்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெளியிட் டுள்ள அறிக்கை ஒன்றில், தமிழக அரசு அலட்சியப்போக்கில் செயல் பட்டு வருவதாக அவர் விமர் சித்துள்ளார். இந்த அலட்சியம் காரணமாக கடந்த சில நாட்களில் மட்டும் 20 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிவிட்டதாக அவர் சுட்டிக் காட்டி உள்ளார். "கர்நாடகாவிலும் கேரளாவிலும் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதி களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள அணைகளும் மேட்டூர் அணையும் நிரம்பி வழிகின்றன. "தற்போது மேட்டூர் அணை யிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், அதனால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. நடப்பாண்டில் கடந்த சில தினங்களில் மட்டும் 20 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகி உள்ளது," என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காவிரியின் துணை நதியான பவானி ஆற்றின் கூடுதல் நீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் வழங்க அத்திக் கடவு-அவிநாசி திட்டம் உருவாக் கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தத் திட்டம் கடந்த 60 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப் பட்டிருக்கிறது என சுட்டிக்காட்டி உள்ளார். இந்தத் திட்டத்தைத் தொடக்க காலத்திலேயே செயல்படுத்தி இருந்தால், சில கோடி ரூபாய் செலவில் முடிந்திருக்கும் என்றும், தற்போது திட்டமதிப்பு ரூ.3,500 கோடிக்கும் கூடுதலாக அதிகரித் துள்ளது என்றும் புள்ளி விவரங் களை அளித்துள்ளார் ராமதாஸ். "இதேபோல் ஏராளமான திட்டங்கள் தமிழகத்தில் செயல் படுத்தப்பட வேண்டி உள்ளன. இது தொடர்பாக மத்திய அரசிடம் எந்தவித நிதியையும் எதிர்பார்க்கா மல் தமிழக அரசே நீர்ப்பாசனத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்," என்றும் ராமதாஸ் மேலும் வலியுறுத்தி உள்ளார்.