எதிலும் லஞ்சம்: நீதிபதி அதிருப்தி

எதிலும் லஞ்சம்: நீதிபதி அதிருப்தி

1 mins read

சென்னை: மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, விதிமீறிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஆகியவை தொடர்பில் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித் துள்ளது. மாநகராட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக ஒரு வழக்கின் விசாரணையின்போது நீதிபதி சுப்பிரமணியம் கவலை தெரிவித்தார். "சென்னை மாநகராட்சியில் கட்டட ஒப்புதல் உள்ளிட்ட எந்தச் சான்றிதழையும் லஞ்சம் தராமல் பெற முடி யாத நிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர்," என்றும் நீதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.