பசுமை வழிச் சாலையை எதிர்த்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம்

பசுமை வழிச் சாலையை எதிர்த்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம்

2 mins read

தி.மலை: சென்னை-சேலம் இடையேயான எட்டுத்தட பசுமை வழிச் சாலைக்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ் வாறு தீர்மானம் நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்த அரசு அதிகாரிகளைப் பொதுமக்கள் சிறைபிடித்ததால் திருவண்ணா மலையில் பரபரப்பு நிலவியது. பசுமைவழிச் சாலைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அத்திட்டம் நிறைவேற்றப்படும் மாவட்டங் களில் இந்த எதிர்ப்பு இரு மடங்காக உள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவண் ணாமலை மாவட்டத்தில் நடை பெற்ற கிராம சபைக் கூட்டத்தின் போது பசுமை வழிச் சாலையை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது.

அங்கு நேற்று முன்தினம் 860 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு முன்னதாக பசுமை வழிச் சாலைக்கு எதிராகத் தீர் மானம் எதுவும் நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அதி காரிகளுக்கு அறிவுறுத்தப்பட் டதாகத் தெரிகிறது.

இதையடுத்துக் கடும் எதிர்ப்பு நிலவிய பகுதிகளில் போலிஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடைபெற் றது. சில இடங்களில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதை ஏற்க மறுத்த அதிகாரி களைப் பொதுமக்கள் சிறை பிடித்தனர். பல இடங்களில் 4-5 மணி நேரம் வரை அதிகாரிகள் சிறை வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில இடங்களில் கிராம சபைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே பசுமை வழிச் சாலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நரசிங்க நல்லூர், தொடப்பாடி, ஓரந்தவாடி, நயம்பாடி, சிறு கலாம் பாடி உள்ளிட்ட கிராமங்களில் கூட்டம் நடைபெறவில்லை. பொதுமக்கள் அளித்த மனுக் களை மட்டும் அதிகாரிகள் பெற்றுச் சென்றனர். திருவண் ணாமலை மாவட்டத்தில் பல கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவில்லை.