காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள உளவுத் துறை அதிகாரிகளின் பயிற்சி நிலையம் மீது துப்பாக்கிக் காரர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதாக அதிகாரி ஒருவர் கூறினார். அத்தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் அல்லது காயம் அடைந்தனர் என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.
நேற்று காலை 10 மணியளவில் அந்தப் பயிற்சி நிலையம் மீது துப்பாக்கிக்காரர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காபூல் போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். தற்சமயம் அக்கட்டடத்திற்குள் சிக்கியிருப்பவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முயன்று வருவ தாகவும் அப்பேச்சாளர் சொன்னார். அந்தப் பயிற்சி நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு கட்டுமானப் பகுதியிலிருந்து துப்பாக்கிக்காரர் கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அத்தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிக்காரர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை.
அவர்களை எதிர்த்து பாதுகாப்புப் படையினர் கடும் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப் படுகிறது. அப்பகுதியில் வெடிப்பு சத்தத்தைக் கேட்டதாக குடியிருப் பாளர்கள் கூறியதாக ஊடகத் தகவல்கள் கூறின. அத்தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. காபூல் தாக்குதலில் தாங்கள் ஈடுபடவில்லை என்று தலிபான் குழு அறிவித்துள்ளது.

