கத்திமுனையில் பெண்களை சீரழித்த வாடகைக் கார் ஓட்டுநர் அதிரடிக் கைது

கத்திமுனையில் பெண்களை சீரழித்த வாடகைக் கார் ஓட்டுநர் அதிரடிக் கைது

2 mins read

சென்னை: கத்திமுனையில் பல பெண்களை மிரட்டிப் பாலியல் வன்புணர்வு செய்த வாடகைக் கார் ஓட்டுநரைப் போலிசார் கைது செய்துள்ளனர். சென்னை கிழக்குக் கடற் கரைச்சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்து அந்த ஓட்டுநர் இவ்வாறு செய்துள்ளார். இப்பகுதியில் ஒரு கும்பல் பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்வதாக வும், நகைகளைக் கொள்ளையடிப்ப தாகவும் அண்மையில் தகவல் பரவியது. இதுகுறித்துப் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தான் இவ்வாறு பாதிக்கப்பட்டதாகப் புகார் அளித்தார். அவர் அளித்த வாடகைக் காரின் பதிவு எண்ணை வைத்துப் போலிசார் விசாரணை மேற்கொண் டனர். இதில் அந்தக் காரின் ஓட் டுநர் சுரேஷ் சிக்கினார். விசார ணையில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களைத் தாம் இவ்வாறு சீரழித்ததாக அவர் ஒப்புக் கொண் டார்.

"கடற்கரைச் சாலையில் தனியே நடந்து செல்லும் பெண் களைக் குறி வைத்து பேச்சுக் கொடுப்பேன். எப்படியாவது காரில் ஏற்றிக்கொண்டு விரும்பும் இடத் தில் இறக்கி விடுவதாக அவர் களை நம்ப வைப்பேன். அதை நம்பி சிலர் காரில் ஏறிக் கொள்வர். ஒதுக்குப்புறமான இடத்தை அடைந்ததும் காரை நிறுத்திவிட்டு அதன் கண்ணாடி களை ஏற்றிவிட்டு, பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என மிரட்டுவேன். பொதுவாகப் பெண்கள் சத்தம் போடுவதில்லை. அப்படியே உதவி கேட்டுக் குரல் எழுப்பினாலும் அது வெளியே கேட்காது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளேன். பின்னர் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளைப் பறித்துக்கொள்வேன்," என்று சுரேஷ் வாக்குமூலம் அளித் துள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இனி தைரியமாகப் புகார் அளிக்கலாம் எனப் போலி சார் தெரிவித்துள்ளனர்.