மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

1 mins read
c85dbb3b-02c8-4bf7-ad70-1efaf5b999e7
-

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து காவிரிக் கரையோர மக்களுக்குத் தொடர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா, கேரளா ஆகிய இரு மாநிலங்களில் மழை தற் போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாகத் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

காவிரி, பவானி, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுக ளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. இதனால் ஆயிரக்கணக் கான மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட்டுள்ள தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து கொண்டு தமிழகம் நோக்கி 200,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை தனது முழுக் கொள்ள ளவை எட்டியது. இதையடுத்து நேற்று காலை அணையிலிருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

வெள்ளத்தால் சூழப்பட்ட பவானி கரையோரம் உள்ள தொட்டம்பாளையம் கிராமம். படம்: ஊடகம்