நீலகிரி: நீலகிரி மாவட்டம் மாயார் யானைகள் வழித்தடத்தில் மேலும் 10 விடுமுறை உல்லாச இடங்களை மூடிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மாயார் பள்ளத்தாக்கு, சீகூர் பள்ளத் தாக்கு, சோலூர், மசினக்குடி, உல்லத்தி, கடநாடு பஞ்சாயத்து ஆகிய பகுதிகள் யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக் கப்பட்டு உள்ளன. ஆனால், இந்தப் பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக விடு முறை உல்லாச இடங்கள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ள தாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தெட ரப்பட்டது. யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுமுறை உல் லாச இடங்களுக்குப் பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் கடந்த 9ஆம் தேதி பிறப்பித்தனர். சட்டத்துக்குப் புறம்பாக முன் அனுமதியில்லாமல் கட்டப்பட் டிருப்பவை இரு நாட்களில் மூடப் படவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அந்த அவகாசம் முடிந்த நிலையில், இந்த மாதம் 12ஆம் தேதி அவற்றை மூடும் பணி தொடங்கி இப்போது நடந்து வருகிறது. இந்தப் பொழுது போக்கு இடங்கள் தவிர பிற 12 இடங்களின் ஆவணங்களை ஒரு தனிக் குழு ஆய்வு செய்தது.
மேலும் 10 பொழுதுபோக்கு இடங்களை மூடிவிட முடிவு
1 mins read

