சென்னை: கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். அணைகள் நிரம் பியதால் தண்ணீர் திறக்கப்பட்டதை யடுத்து வெள்ளப்பாதிப்பு அதிகரித் துள்ளது. உயிர் இழப்பும் அதி கரித்து வருகிறது. வீடு, உடைமைகளை இழந்து உணவு, உடையின்றி மக்கள் தவிக்கிறார்கள். கேரளாவை புரட்டிப் போட்ட மழையால் சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. கேரள அரசுக்குத் தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்த நிலை யில் தமிழக அரசு ஊழி யர்களும் தங்கள் சார்பாக நிதி யுதவி வழங்க முடிவு செய்துள்ள னர். அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் ஒருநாள் சம்பளத்தைப் பிடித் தம் செய்துகொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்ஜிஓ) சங்கம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.சண்முக ராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது: "கேரள மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக துயருற்ற கேரள மக்களுக்கு உதவி செய்யும் வகை யிலும் அவர்களது துயரத்தில் தமிழக அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் பங்குகொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களில் ஒரு பகுதி என்ற நிலையிலும் நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளோம். "எங்களது ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து நிவாரண நிதி வழங்க உரிய ஆணை வழங்குமாறு தமிழக முதலமைச்சரை அரசு அலுவலர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது. "இதற்கு முன்னுதாரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இதுபோன்று தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கி றேன்," என்று கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தின் கொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எர்ணாகுளத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு கனரக வாகனம் ஒன்றில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்கின்றனர் தொண்டூழியர்கள். படம்: ஏஎஃப்பி

