தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிபுணர்கள் குழு தீவிர பரிசீலனை

1 mins read

சென்னை: நாட்டின் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரப் பட்டினத்தில் அமைப்பதற்குரிய ஆய்வுகள் தொடங்கி உள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத் துள்ளது. குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் பட்சத்தில், அது இந்திய விண் வெளி ஆய்வுக் கழகத்தின் வளர்ச்சிக்கு வெகுவாக கை கொடுக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தியாவில் தயாரா கும் அனைத்து செயற்கைக்கோள் களும் ஆந்திராவின் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் அமைந்திருக்கும் இரு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்தே விண்ணில் செலுத்தப் படுகின்றன.

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் தனது பல்வேறு ஆய்வு களை விரிவுபடுத்தி வரும் நிலையில், மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். புதிய ஏவுதளத்திற்கான இடத்தை தேர்வு செய்வதற்கு நிபு ணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவினர் பல்வேறு இடங்க ளில் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட் டத்தில் உள்ள குலசேகரப்பட்டி னத்தை தேர்வு செய்தனர். எனி னும் சில காரணங்களால் அங்கு ஏவுதளம் அமைக்கும் பணி ஒத்திப்போடப்பட்டது. இந்நிலையில் புதிய ஏவு தளத்தை அங்கு அமைப்பதில் தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித் ததாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.