வெள்ளத்தில் தவித்த கர்ப்பிணிப் பெண்

வெள்ளத்தில் தவித்த கர்ப்பிணிப் பெண்

1 mins read
a5429711-55cc-4df6-8fd8-e24046011ffa
-
Google News Preferred Icon

எர்ணாகுளம்: கேரளா மாநிலத்தை மழையும் வெள்ளமும் புரட்டிப் போட்டுள்ள நிலையில் எர்ணா குளத்தில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் வீட்டில் பிரசவ வலியால் தவித்த கர்ப்பிணிப் பெண்ணை கடற்படையினர் மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆலுவா என்ற இடத்தில் நேற்று முன்தினம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவ வலியால் தவிப்பதாக தகவல் அறிந்த கடற்படையினர் அங்கு ஹெலி காப்டர் மூலம் விரைந்தனர். வெள்ளம் சூழ்ந்த வீட்டில் வீரர்கள் இறங்கியபோது சஜிதா ஜபீல், 25 என்ற கர்ப்பிணி பெண் வலியால் துடித்துக் கொண்டிருந் தார். அவரை மீட்ட வீரர்கள் எர்ணாகுளம் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சில நிமிடங்களில் சுகப் பிரச வத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்து வர்கள் தெரிவித்தனர்.

கர்ப்பிணிப் பெண் சஜிதா ஜபீலை கடற்படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். படம்: டெக்கான் குரோனிக்கல் இணையம்