புதுடெல்லி: கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்படப் பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்த நிலையி ல் வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் கே.எம்.ஜோசப் உள்பட வழக்கறிஞர்கள் பலர் நீதி மன்ற வளாகத்தில் நிவாரண நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஒரு கோடி ரூபாயைக் கேரள முதல் வர் வெள்ள நிவாரண நிதியில் செலுத்தினார். அவரது மகனான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணன் வேணுகோபால் ரூ.15 லட்சமும், மற்ற மூத்த வழக்கறிஞர் களான ஜெய்தீப் சிங் மற்றும் சந்தர் உதய் சிங் ஆகியோர் தலா ரூ.5 லட்சமும் நிவாரண நிதியாக அளித்தனர். மேலும், உச்ச நீதிமன்ற பார் மன்றம் சார்பாக அதன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.30 லட்சம் கேரளாவிற்கு வழங்கப்பட்டது.

